பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், இந்த வாரம் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசிக்கு செல்ல உள்ளார்.
சனிக்கிழமை (ஜூன் 14) திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் 250 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் செல்ல உள்ளார் எனக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 79 வது பிறந்தநாளுடன் இணைந்து இந்த நிகழ்வு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்த இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் மற்றும் இரு நாடுகளுடனும் உறவுகளை சமநிலைப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க முயற்சிகளின் பின்னணியில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
தனது வருகையின் போது, அசிம் முனீர் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பென்டகனின் மூத்த அதிகாரிகளைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இரு நாடுகளும் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார் பாகிஸ்தான் ராணுவ தளபதி?
