பாகிஸ்தானுடனான உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மீண்டும் வலியுறுத்தினார்.
35 நிமிட தொலைபேசி உரையாடலின் போது, பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்களை டிரம்ப், மோடியிடம் கேட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மோடி, இந்தியாவின் பதில் “அளவிடப்பட்டது” என்றும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்ததாகவும் கூறினார் என மிஸ்ரி தெரிவித்தார்.
டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தாரா பிரதமர் மோடி?
