சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனம், ஆக்ஸ்ட் 6ஆம் நாள், ஜுலை திங்களில், சீன நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து விலை குறியீட்டை வெளியிட்டது. உள் நாட்டு சந்தை தேவை நிலையாக அதிகரிப்பதோடு, ஜுலை திங்களில் இக்குறியீடு சிறியளவில் அதிகரித்துள்ளது.
ஜுலை திங்களில் இக்குறியீடு 102.5 ஆகும். கடந்த திங்களில் இருந்ததை விட 0.15 விழுக்காடு அதிகம். புள்ளிவிவரங்களின் படி, ஜுலை திங்களில் பி எம் ஐ குறியீடு 2 மாதங்களில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. புதிய பதிவு எண்ணிக்கை கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.9 விழுக்காடு அதிகரிப்பதோடு சுமார் 50 விழுக்காட்டை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.