சீனாவின் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம், இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டில் உள் நாட்டு சுற்றுலாச் சந்தை அறிக்கையை வெளியிட்டது. இதில், இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டில், உள் நாட்டில் பயணம் மேற்கொண்ட சீனர்களின் எண்ணிக்கை 499 கோடியே 80 இலட்சம் என்றும், இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18 விழுக்காடு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நகரவாசிகளின் பயண எண்ணிக்கை 378 கோடியே 90 இலட்சமாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 15.9 விழுக்காடு அதிகமாகும்.
முதல் மூன்று காலாண்டில், சீனர்கள் பயணங்களுக்காக செலவிட்ட தொகை 4 இலட்சத்து 85 ஆயிரம் கோடி யுவானாகும். இத்தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11.5 விழுக்காடு அதிகம் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
