சீன-ஃபிஜி தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஃபிஜி அரசுத் தலைவர் ரது நைகாமா லாலாபலவு ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
இச்செய்தியில் ஷி ச்சின்பிங் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் இரு நாடுகள் உயர் தரத்துடன் பங்கெடுத்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்து வருகின்றன என்றார். மேலும், சீன-ஃபிஜி உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் லாலாபலவுடன் இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தி, சீன-ஃபிஜி பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு புதிய கட்டத்தில் காலடியெடுத்துவைப்பதை முன்னேற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இரு நாட்டுறவு மேலும் அழமாக வளர்ச்சியடைந்து, உயிராற்றல் கொள்ளும் என்று நம்புவதாக லாலாபலவு தெரிவித்தார்.
அதேநாள், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், ஃபிஜி தலைமையமைச்சர் சிட்டிவ்னி ரபுகா ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
