சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி நேரடி தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில், ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
அதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. பிற நாடுகளும் இந்த போரில் பங்கு பெறலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மேலும், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
