நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் போதேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.
சித்வான், நவால்பராசி, நுவாக்கோட் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இப்பேரழிவில் 320 இந்தியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என இந்திய வெளியுறவுத் துறை கவலை தெரிவித்துள்ளது.
எனினும், நம்பிக்கை செய்தியாக நேபாளத்தின் வெள்ளப் பாதிப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேர், காத்மாண்டுவிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தடைந்தனர்.
காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தவிர, திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 33 இந்தியத் தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேபாள வெள்ளப் பேரழிவு: தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் இந்தியா திரும்பினர்
