ஐபிஎல் 2025 தொடரில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு நுழைந்து தங்கள் இடத்தை உறுதி செய்துவிட்டது.
இனி மிச்சம் இருக்கும் 3 அணிகள் மட்டுமே இந்த சுற்றுக்கு தகுதி பெற விளையாட வேண்டி இருக்கும்.
நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணி, பிளேஆஃப்களுக்கு முன்னேறிய நிலையில், இந்த மாற்றம் நடந்துள்ளது.
குஜராத் அணி 12 போட்டிகளில், 9 வெற்றிகளுடன், 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ்(17 புள்ளிகள், 12 போட்டிகள்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (17 புள்ளிகள், 12 போட்டிகள்) அணிகளும் டாப் இடங்களைப் பிடித்தன.
ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள்
