தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையுடன் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தென்காசியில் அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறவிருந்த அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், பருவமழையால் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், முதல்வரின் பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிந்தைய தேதியில் பயண விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
