பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்க்கு ரன்கள் குவித்துள்ளது. அதிலும், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் அடித்திருந்தார். நியூஸிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டும் மட்டும் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்க்கு களமிறங்கவிருக்கிறது. முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் விளையாடிய இந்திய அணி மோசமான தொடக்கத்தை வெளிப்படுத்தியது. மேலும், மழையின் காரணமாக பிட்சும் நியூஸிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது.
அதனைச் சரியாக பயன்படுத்திய நியூஸிலாந்து அணியின் வேக பந்து பவுலிங் பட்டாளம் இந்திய அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் திணற வைத்தனர். அதிலும், ஓ ரூர்க், ஹென்றி இருவரும் ஆதிக்கத்தை செலுத்தினார்கள். இடையில், பண்ட் மட்டும் நின்று விளையாட துரதிஷ்டவசமாக அவரும் 20 ரன்கள் எடுத்தார்.
ஆனால், அதுவும் இந்திய அணி துளியும் கைகொடுக்கவில்லை. இறுதியில், கடைசி, விக்கெட்டுக்கு விளையாடி வந்த சிராஜும், குலதீப் யாதவும் முடிந்த அளவுக்கு போராடினார்கள் ஆனாலும் அவர்களால் ரன்ஸ் சேர்க்க முடியவில்லை.
இதன் காரணமாக இந்திய அணி 46 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான நிலையில் இருந்து வருகிறது. மேலும், அடுத்ததாக இந்திய அணி பவுலிங் செய்ய களமிறங்கவுள்ளனர். 3 பந்து வீச்சாளர்கள் கொண்ட இந்திய அணி நியூஸிலாந்து அணியை சுருட்டி ஆதிக்கம் செலுத்தும் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.