பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம் என இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
பேச்சுவார்த்தைகளை இறுதி செய்வதற்காக தலைமை பேச்சுவார்த்தையாளரும் வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளருமான ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழு தற்போது வாஷிங்டனுக்கு வந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான டிரம்பின் காலக்கெடு ஜூலை 9 ஆம் தேதியுடன் முடிவடைவதால், இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்படும்
