சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
உலக பொருளாதார மீட்சிக்கான சீனாவின் பங்கு
இவ்வாண்டு சீன பொருளாதார அதிகரிப்பு பற்றிய மதிப்பீட்டை ஐ.நா, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் அண்மையில் [மேலும்…]
உலகளவில் அதிகம் கடன் கொண்ட நாடாகத் திகழும் அமெரிக்கா
சர்வதேச நிதிச் சங்கம் அண்மையில் உலகக் கடன் கண்காணிப்பு பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தற்போது உலகளாவிய கடன் தொகை 305 லட்சம் [மேலும்…]
சீனாவின் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் உற்பத்தி அதிகரிப்பு
சீனத் தேசிய கடல் எண்ணெய் குழுமம் ஜுன் 8ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சீனா தற்சார்பாக வளர்த்த முதலாவது ஆழ்கடல் எண்ணெய் வயல் [மேலும்…]
ஒரே ஏவூர்தியில் 26 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியது சீனா
லிஜியன்-1 ஒய்2 என்னும் ஏவூர்தி மூலமாக, 26 செயற்கைக்கோள்கள் ஜூன் 7ஆம் நாள் நண்பகல் ஜியுச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.இந்த செயற்கைக்கோள்கள், தொழில்நுட்ப [மேலும்…]
மத்திய கிழக்கு நாடுகளில் நல்லிணக்கத்தை அமெரிக்கா தடுக்க முடியாது
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டோனி பிளிங்கன் ஜூன் 6முதல் 8ஆம் நாள் வரை சௌதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டார். அமெரிக்க உளவு அமைப்பான [மேலும்…]
பசுமை வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கத்தை உள் மங்கோலியா கடைப்பிடிக்க வேண்டும்:ஷி ச்சின்பிங்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் ஆய்வுப் பயணம் மேற்கொண்ட [மேலும்…]
சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் பங்கு
சீனாவின் சுங்கத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், சீனாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சாதனைகளைப் பெற்றுள்ள அரசு சாரா தொழில் [மேலும்…]
சீனாவில் கிராமப்புற வளர்ச்சி பற்றிய ஆய்வறிக்கை
2வது ஐ.நா மனித உறைவிட மாநாட்டின்போது, சீனாவின் தொங்ஜீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவின் ஆய்வறிக்கை ஒன்றை ஐ.நா மனித உறைவிட பணியகம் ஜுன் [மேலும்…]
பண்பாட்டு ஆற்றல் கட்டுமானம் பற்றிய முதல் மன்றக் கூட்டத்துக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துகள்
சீனாவின் பண்பாட்டு ஆற்றல் கட்டுமானம் பற்றிய முதலாவது மன்றக் கூட்டம் ஜுன் 7ஆம் நாள் பிற்பகல் ஷென்சென் நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
காடு வளர்ப்பில் சீனாவின் விடா முயற்சி
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் பயன்னூர் நகருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பாலைவனமாதல் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக் [மேலும்…]




