சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
2023-யில் இந்தியாவை பெருமைப்படுத்திய 10 நிகழ்வுகள்!
2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு என்றும் மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். ஏனெனில் இந்தியா இந்த வருடம் பல மைல்கல் சாதனைகளை செய்துள்ளது. அதில் [மேலும்…]
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்- அரையிறுதியில் இந்தியா அணிகள் அதிர்ச்சி தோல்வி
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு ஏமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. [மேலும்…]
காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்ட வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தனமண்டி என்ற பகுதியில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு எத்தியோபியாவின் முன்னாள் அரசு தலைவர் அளித்த பேட்டி
எத்தியோபியாவின் முன்னாள் அரசு தலைவர் முலது தெஷோம் சீனாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பயின்று, பீக்கிங் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெற்றார். எத்தியோபியாவின் [மேலும்…]
மதுரை அரசு தொழில் நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
தமிழ்நாடு அரசு பலவகைதொழில் நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது. 2020-2023 கல்வி ஆண்டை சேர்ந்த 298 மாணவ மாணவிகள் தங்களது டிப்ளமோ பட்டங்களை [மேலும்…]
சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தும் இஸ்ரோ! – இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்
இஸ்ரோ சந்திரயான்-3 வெற்றியடைந்ததையடுத்து, சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தவுள்ளது. சந்திரயான் – 3 இன் மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) [மேலும்…]
பங்குச்சந்தையில் இன்றும் பெரும் ஏற்றம்.. சென்செக்ஸ் 969 புள்ளிகள் உயர்வு
பங்குச்சந்தையில் மும்பை பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் 969 புள்ளிகள் உயர்வை சந்தித்தது. 71 ஆயிரத்து 483 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை மும்பை [மேலும்…]
குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேச வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங் வேண்டுகோள்
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில், சீனாவின் [மேலும்…]
கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா
வந்தவாசி, டிச 16: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ்ப் பணி ஆற்றி வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் எங்கே போயின [மேலும்…]
குவாங் சீ ச்சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேச வளர்ச்சி குறித்து ஷி ச்சின்பிங் வேண்டுகோள்
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில், சீனாவின் குவாங் [மேலும்…]




