சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி
சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி 2024ஆம் ஆண்டு சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி [மேலும்…]
சீன-பிரான்ஸ் உறவு பற்றிய பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சரின் கருத்து
சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சர் ஜீன்-பியர் ரஃபரின் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி [மேலும்…]
கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்கு தடை
தென்காசி பழைய குற்றாலம் அருவியில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான். பின்னர் [மேலும்…]
இந்திய பொருளாதாரம் 6.9% ஆக உயரும்! – அமெரிக்க கணிப்பு
வலுவான முதலீடு, தனிநபர் நுகர்வு அதிகரிப்பால் நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி ஆறு புள்ளி இரண்டு சதவீதத்திலிருந்து ஆறு புள்ளி ஒன்பது சதவீதமாக [மேலும்…]
டெல்லியில் விமானத்தில் தீ விபத்து!
டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி [மேலும்…]
ஈரானில் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலி!
ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலியாகினர். ஈரானின் கடந்த சில தினங்களாக இயல்பை காட்டிலும் அதிக அளவு மழை [மேலும்…]
மண்சரிவு: மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் ரத்து!
மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்தது குன்னூர் வழியாக [மேலும்…]
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குதான்
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான். ! கவிஞர் இரா .இரவி இமயம் தொட முடியாது என்றார்கள் இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் ! நிலவிற்கு செல்ல [மேலும்…]
அணிந்துரை அணிவகுப்பு
.அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி. வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன [மேலும்…]




