சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
அதிக பணம் ஈட்டியுள்ள அமெரிக்க ராணுவ தொழிற்துறை நிறுவனங்கள்
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 16 [மேலும்…]
தமிழகம் திமுக ஆட்சியில் பின் தங்கியுள்ளது: அண்ணாமலை
தமிழகத்தில் குடும்ப ஆட்சியும் ஊழலும் மட்டும்தான் நடைபெறுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் [மேலும்…]
2023ஆம் ஆண்டு சீனாவின் சேவை வர்த்தகத்தின் உயர்வேக வளர்ச்சி
சீன வணிக அமைச்சகம் பிப்ரவரி முதல் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு சீனாவின் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் மொத்த மதிப்பு 6 [மேலும்…]
ஃபென்டானில் நெருக்கடியைத் தீர்ப்பதில் அமெரிக்கா தானே தன்னில் இருந்து காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும்
ஜனவரி 30ஆம் நாள் சீனத் தேசிய போதைப்பொருள் தடுப்புக் குழுத் தலைவர் பெய்ஜிங்கில் அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புக்கான கூட்டு பிரதிநிதிக் குழுவினர்களைச் சந்தித்துள்ளார். சீனாவும் [மேலும்…]
தமிழக மக்கள் ஊழல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்! – அண்ணாமலை
இந்து மத விரோத போக்கில் ஈடுபட்டுவரும் எவ வேலுவை தமிழக பாஜக கடுமையாக கண்டிக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு [மேலும்…]
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு [மேலும்…]
சீனாவின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கை கென்யாவில் தொடக்கம்
சீன ஊடகக் குழுமம் வழங்கிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் நடவடிக்கை ஜனவரி 31ஆம் நாள் கென்யாவுக்கான ஐ.நாவின் நைரோபி அலுவலகத்தில் நடைபெற்றது. சீனாவின் [மேலும்…]
புரோட்டின் லட்டு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: நெய்- 4 ஸ்பூன் நிலக்கடலை- ஒரு கப் உலர் திராட்சை- 100 கிராம் முந்திரி- 50 கிராம் பாதம்- 50 கிராம் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழு கூட்டம் நடைபெற்றது
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு ஜனவரி 31ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி [மேலும்…]
குறையும் சிலிண்டர் விலை – எவ்வளவு தெரியுமா?
ஒவ்வொருவரின் வீட்டிலும், அன்றாட வாழ்க்கையிலும் சமையல் கேஸ் உருளை முக்கியமான ஒன்றாகிவிட்டது. கிராமத்தில் வசிப்பவர்களும், நகரத்தில் வசிப்பவர்களும் கேஸ் சிலிண்டர் பயன்படுத்திச் சமையல் வேலைகளை [மேலும்…]




