சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
பறிபோன பொன்முடியின் MLA பதவி; விரைவில் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல்
நீதிமன்ற உத்தரவு காரணமாக திமுகவின் பொன்முடி, தனது அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்த நிலையில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று [மேலும்…]
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 காரட் [மேலும்…]
தூதாண்மை குறித்த செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் நடைபெறுதல்:என்.பி.சி.
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் வரும் மார்ச் 7ஆம் நாள் காலை 10மணியளவில் செய்தியாளர் கூட்டம் ஒன்றைப் பெய்ஜிங்கில் நடத்தவுள்ளது. [மேலும்…]
டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி !
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த [மேலும்…]
தரவுகள்: சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி
கடந்த சில நாட்களில், இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில், சீனப் பொருளாதாரம் உச்சத்தை அடைவது போன்ற ஒலியும் [மேலும்…]
உயர்தர உற்பத்தி திறனை முன்னேற்றும் திறவுகோல்
உயர்தர உற்பத்தி திறன், பயனுள்ள உயர் நிலை மற்றும் உயர் தரமான உற்பத்தி முறையைக் குறிக்கிறது. தொழில் நிறுவனங்கள் பணிப்பயனை உயர்த்துவதற்கான முக்கியமான வழியாக [மேலும்…]
புதிய தரமான உற்பத்தி திறன்களை வளர்க்க சீனா இலக்கு
14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரின் சியாங்சூ பிரதிநிதிக்குழுவின் பரிசீலனையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 5ஆம் நாள் மாலை கலந்துகொண்டார். [மேலும்…]
நூலாசிரியர் இராம.வேதநாயகம்
அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் வனிதா பதிப்பகம் : 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய [மேலும்…]
மழைக்குருவி!
மழைக்குருவி! நூல் ஆசிரியர் : கவிஞர் கயல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ், [மேலும்…]
மலேசியத்தமிழர்!
தமிழும் மலேசியத் தமிழரும்! கவிஞர் இரா. இரவி. ****** மலேசியா நாடு போலவே இந்தியாவிலும் மங்காத தமிழை ஆட்சிமொழி ஆக்கிடுவோம்! மலேசியா நாட்டில் வாழ்ந்திட்ட [மேலும்…]




