சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
ஈரான் தலைவர்களை குறிவைத்த இஸ்ரேல்; ரகசியமாக எச்சரித்த அமெரிக்கா
மத்திய கிழக்கில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் [மேலும்…]
கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய்
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் [மேலும்…]
ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரையைப் பாராட்டிய சர்வதேச பிரமுகர்கள்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 105ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை, சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
சுதந்திரமும் திறப்பும் கொண்ட ஆசிய-பசிபிக் பிரதேசம் என்ற டகாயிச்சியின் கருத்து பற்றி சீனக் கருத்துக்கள்
சுதந்திரமும் திறப்பும் கொண்ட ஆசியா-பசிபிக் பிரதேசம் என்பதைக் கட்டியமைப்பதற்கான முக்கியத்துவத்தை, ஜப்பானியத் தலைமையமைச்சர் டகாயிச்சி தனது இந்தியப் பயணத்தின் போது மீண்டும் வலியுறுத்தினார். இது [மேலும்…]
“தீபாவளிக்கு வேட்டி, சேலை கொடுக்குறாங்களா?” CM விஜய்யின் புது பிளான்…. ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!
தமிழகத்தில் தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து அதிரடியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வரும் 2027-ஆம் [மேலும்…]
அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!
புகழ்பெற்ற அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கான புனித யாத்திரை தொடங்கியது, இன்று முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மொத்தம் 57 நாட்களுக்கு இந்த யாத்திரை [மேலும்…]
2026 FIFA உலகக்கோப்பையுடன் சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு 2026 FIFA உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவரது [மேலும்…]
துணை மருத்துவப் படிப்புகள் 2026: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படும் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டித்து [மேலும்…]
சிதறும் அதிமுக- இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு
ஜூலை 6-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக ஆலோசனை மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் [மேலும்…]
நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை : 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதம் – சிறப்பு தொகுப்பு!
நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை 42 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதமாக இந்த மாதம் [மேலும்…]




