சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
அமெரிக்க அரசு தலைவர் டிரம்ப்பின் சீன பயணத் திட்டம் அறிமுகம்
சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், அமெரிக்க அரசு தலைவர் டிரம்ப் மே 13 முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் [மேலும்…]
2026 உலக டிஜிட்டல் கல்வி மாநாடு துவக்கம்
சீனாவின் ஹாங்சோ நகரில் மே 11ஆம் நாள் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு உலக டிஜிட்டல் கல்வி மாநாட்டின் தொடக்க விழாவில், சீன துணை அரசு [மேலும்…]
தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்வு!
17-வது தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகதமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், துணை சபாநாயகர் பதவிக்குத் துறையூர் [மேலும்…]
‘எம்பி ஹோண்டியஸ்’ சொகுசு கப்பலில் 2 இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி! சிகிச்சைக்காக நெதர்லாந்து மாற்றம்!
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘எம்பி ஹோண்டியஸ்’ என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட [மேலும்…]
அரசியல் நாகரிகம்: மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்! வைகோவிடமும் வாழ்த்துப் பெறத் திட்டம்!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று பிற்பகல் 2:30 மணியளவில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் [மேலும்…]
சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், அரசவையின் துணை தலைமை அமைச்சருமான ஹே லீஃபாங், அமெரிக்க தரப்புடன் மே [மேலும்…]
உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் குஜராத் – பிரதமர் மோடி பெருமிதம்!
ஒரு காலத்தில் உப்பு உற்பத்திக்காக மட்டுமே பெயர் பெற்ற குஜராத், தற்போது உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக உருவாகி உள்ளதாக பிரதமர் [மேலும்…]
#BREAKING : அமைச்சர் கீர்த்தனா மட்டும் பதவியேற்கவில்லை..!!
சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று [மேலும்…]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது..!!
2025ஆம் ஆண்டு தொடங்கியது முதலாகவே, தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை கண்டு வந்தது. அதன் விளைவாக கடந்த ஆண்டில் இறுதியில் ஒரு [மேலும்…]
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு..!!
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உளமாற எனக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டு எம்எல்ஏவாக பதவியேற்றார். [மேலும்…]




