சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
ரஷிய அரசுத் தலைவர் புதினின் சீனப் பயணம் நிறைவு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 20ஆம் நாளிரவு, பெய்ஜிங் மாநகரில், ரஷிய அரசுத் தலைவர் புதினுக்கு தேநீர் விருந்து அளித்தார். அப்போது பேசிய [மேலும்…]
சீனாவின் நகர வளர்ச்சி தற்குலக நாடுகளுக்கு மதிப்பு மிக்க அனுபவங்கள் வழங்குகிறது: ஐ.நா மனித உறைவிட பணியகம்
சீனா பசுமையான, சகிப்பு தன்மையுடைய, துடிப்பான நகர வளர்ச்சித் துறையில் பிற நாடுகளுக்கு குறிப்பாக தெற்குலக நாடுகளுக்கு மதிப்பு மிக்க அனுபவங்களை வழங்கியுள்ளது என்று [மேலும்…]
புதிய ரக சர்வதேச உறவு பற்றி உலக மக்களின் கருத்து
உலக பலதரப்புவாதம் மற்றும் புதிய ரக சர்வதேச உறவை ஊக்குவிப்பதற்கான கூட்டறிக்கையை மே 20ஆம் நாள் சீனாவும் ரஷியாவும் கூட்டாக வெளியிட்டன. புதிய [மேலும்…]
ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பிய சீன-பாதிஸ்தான் அரசுத் தலைவர்கள்
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பாகிஸ்தான் அரசுத் தலைவர் சார்தாலியும் 21ஆம் நாள் இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி [மேலும்…]
பத்மஸ்ரீ 2026: கேரளாவின் ‘வன அன்னை’ தேவகி அம்மா பற்றி ஒரு பார்வை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்திய அரசு [மேலும்…]
2026 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ பெற்ற சமஸ்கிருத அறிஞரான வேம்பட்டி குடும்ப சாஸ்திரி
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மே 25 அன்று வழங்குவார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்திய அரசு [மேலும்…]
“இதை யாருமே எதிர்பார்க்கலையே.!” கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் வைத்த முதல்வர் விஜய்! அமைச்சரவையில் செங்கோட்டையன் பதவி திடீர் மாற்றம்..?
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தவெக அமைச்சரவையில் திடீரென நடத்தப்பட்டுள்ள அதிரடி மாற்றம் அரசியல் வட்டாரத்தை தலைகீழாக [மேலும்…]
அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம்பெறும் – காதர் மொகிதீன்..!
தவெக அமைச்சரவையில் இடம்பெறுமாறு விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்து ஐயூஎம்எல் தலைவர் [மேலும்…]
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்; புதிய நிதி அமைச்சராக மரிய வில்சன் நியமிப்பு
தமிழக அரசியல் களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, சில முக்கிய அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டு ஒரு புதிய அரசியல் [மேலும்…]
“யாருக்கு எந்த துறை?” வெளியானது தவெக அமைச்சரவையின் முழு லிஸ்ட்…. முதலமைச்சர் விஜய் போட்ட செம ஸ்கெட்ச்….!!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையின் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அதிரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவை [மேலும்…]




