சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மோடி மாற்றிவிடுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்..!
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தோல்வி பயத்தை மறைக்க அபத்தமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் [மேலும்…]
LPG சிலிண்டர் முன்பதிவுக்கு ரூ.200 கேஷ்பேக்: அசத்தல் அறிவிப்பு…!!
முன்னணி டிஜிட்டல் தளமான பேடிஎம் (Paytm) சமீபகாலமாக தனது பயனர் தளத்தை அதிகரிக்க, கவர்ச்சிகரமான கேஷ்பேக் சலுகைகள், UPI LITE மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட UPI [மேலும்…]
நேரடி அரசியலில் சபரீசன்: திமுக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பு
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன், இதுவரை திரைக்குப் பின்னால் இருந்து திமுகவின் தேர்தல் உத்திகளை வகுத்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாகத் [மேலும்…]
விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: 60% இலவச இருக்கை ஒதுக்கீடு உத்தரவு நிறுத்திவைப்பு
விமானப் பயணிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த மார்ச் 17-ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு முக்கிய உத்தரவு, [மேலும்…]
‘7000 ஆண்டு கால நாகரீகத்தை யாராலும் அழிக்க முடியாது’:அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதில்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானை நோக்கி விடுத்த “கற்காலத்திற்கு தள்ளுவோம்” என்ற மிரட்டல், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு [மேலும்…]
அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் [மேலும்…]
வருமான வரித்துறையின் புதிய இணையதளம் மற்றும் ‘கர் சாதி’ ஏஐ உதவியாளர் அறிமுகம்
இந்திய வருமான வரித்துறை, வரி செலுத்தும் முறையை எளிமையாக்கவும், வரி செலுத்துவோரின் சந்தேகங்களைத் தீர்க்கவும் ‘கர் சாதி’ (Kar Saathi) என்ற அதிநவீன செயற்கை [மேலும்…]
காங்கிரஸ் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்க்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் உத்தேச வேட்பாளர் பட்டியல் குமரி [மேலும்…]
விசா கட்டண விதிமுறைகளில் மாற்றம்: வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்குப் புதிய தடைகள்
புதிய நிதியாண்டின் தொடக்கமானது, வெளிநாடு செல்ல அல்லது குடிபெயர விரும்பும் இந்தியக் குடிமக்களுக்கு பெரும் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதம் முதல், முக்கிய நாடுகளில் [மேலும்…]
ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கிய ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி (AAP), மாநிலங்களவையில் தனது துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கக் கோரி மாநிலங்களவை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், [மேலும்…]




