சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
CBSE தேர்வில் குளறுபடி..! “இது என்னோட கையெழுத்தே இல்ல”… நான் எழுதிய விடைத்தாள் எப்படி மாறிச்சு..? ஆதாரத்தை வெளியிட்டு பிளஸ் 2 மாணவர் கண்ணீர்..!
சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, மாணவர் ஒருவர் பதிவிட்ட சமூக ஊடகப் பதிவு தற்பொழுது நாடு [மேலும்…]
மருத்துவ உலகையே அதிர வைத்த சம்பவம்… 3 நிமிடம் இறந்த பெண், கண் முன்னே கண்ட ‘அந்த’ விசித்திர உலகம்…!!!
மூன்று நிமிடங்கள் உயிர் பிரிந்து மீண்டும் உயிர் பெற்ற ஒரு பெண், தான் மரணத்திற்குப் பிறகு கண்ட அதிர்ச்சியூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மருத்துவ [மேலும்…]
3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்பு- சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதமும் சட்டப்பேரவை விதிகளின்படி உள்ளதால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். கடந்த 13ஆம் தேதி [மேலும்…]
சீனாவில் எட்டப்பட்ட வர்த்தக சாதனைகள் ஏபெக் அமைப்புக்கு ஆற்றலை வழங்கும்
ஏபெக் அமைப்பில் சீனா சேர்ந்த 35ஆம் ஆண்டான நடப்பாண்டில், 3ஆவது முறையாக தலைமை பொறுப்பேற்கும் நாடாக விளங்குகிறது. உலகளாவிய நிலைமையைப் பார்க்கும்போது, பல்வேறு தரப்புகள் [மேலும்…]
சீனா-செர்பியா அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 25ஆம் நாள் பெய்ஜிங்கில் செர்பிய அரசுத் தலைவர் அலெக்டாண்டர் வுசிச்-உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த [மேலும்…]
ஷி ச்சின்பிங்குடன் பாகிஸ்தான் தலைமையமைச்சர் சந்திப்பு
சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஷாபாஸ் சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங்குடன் மே 25ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் [மேலும்…]
சீன-அமெரிக்க மக்களுக்கிடையில் நட்பார்ந்த கதைகள் தொடரும்: சீனா
பாலைவனக் கட்டுப்பாடு மற்றும் காடுகள் வளர்ப்பு பணியில் ஈடுபட்டு தேசிய முன்மாதிரி தொழிலாளர் என்ற பெருமை பெற்ற யின் யூஜென் அம்மையார் அண்மையில் இணையம் [மேலும்…]
அமெரிக்கா-ஈரான் இடையே தொடங்கியுள்ள பேச்சுவார்த்தை நிறுத்தப்படக்கூடாது
அமெரிக்கா-ஈரான் இடையே உடன்படிக்கை ஒன்று எட்டப்பட உள்ளது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் 25ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் [மேலும்…]
“ஷிச்சின்பிங்: சீனாவின் ஆட்சி முறை” எனும் நூலின் 5ஆவது தொகுதி 8 மொழிகளில் வெளியீடு
“ஷிச்சின்பிங்: சீனாவின் ஆட்சி முறை” எனும் நூலின் 5ஆவது தொகுதி பிரான்சு, ரஷிய, அரபு, ஸ்பேன், போர்த்துகீஸிய, ஜெர்மன், ஜப்பானிய மற்றும் பாரம்பரிய சீன [மேலும்…]
உயர் தொழில்நுட்ப துறையில் வெளிநாட்டு முதலீடு 20விழுக்காடு அதிகரிப்பு
சீன வணிகத் துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை, சீனாவில் புதிதாக நிறுவப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் [மேலும்…]




